செய்திகள்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் 3 குழந்தைகளின் தாய் மரணம்- போலீசில் புகார்

3 பெண் குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

ஆண் வாரிசு இல்லாததால் கணவன்- மனைவி க்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உமா மகேஸ்வரி வி‌ஷம் குடித்து விட்டதாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உமா மகேஸ்வரியின் தந்தை ராஜ வடிவேல் எழுமலை போலீசில் புகார் செய்துள்ளார். அதில், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.