செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே குடித்து விட்டு வந்த கணவரை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

ஸ்ரீமுஷ்ணம்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர் (வயது 40). இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (35).

வேலை முடிந்த பின்னர் கலைஞர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதேப்போல் நேற்று இரவும் கலைஞர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கோமதி கண்டித்தார்.

பின்னர் அவர் தனது கணவரிடம் கோபித்து கொண்டு அதேப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த கலைஞர் திடீரென வி‌ஷம் குடித்தார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம் பரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீ சில் புகார் செய்யப்பட் டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews