செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முன் இரட்டை கொலை - தாவூத் இப்ராகிம் கூட்டாளி மும்பையில் கைது

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். #mumbai #DawoodIbrahim #doublemurdercase

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்ப்ரா பகுதியில் உள்ள கிஸ்மத் காலனியில் 1998-ம் ஆண்டு இரண்டு தொழிலதிபர்கள் பங்திவாலா (38) மற்றும் பார்விஸ் அன்சாரி (41) மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கேபிள் டிவி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றுள்ளது. இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் கூட்டாளி தாரீக் பார்வீனை போலீசார் நேற்று மும்பையில் வைத்து கைது செய்தனர். பார்வீனிடம் மும்ப்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மேலும் பல தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #mumbai #DawoodIbrahim #doublemurdercase

SCROLL FOR NEXT