குடிபோதையில் மயங்கி கிடக்கும் இளம்பெண். 
செய்திகள்

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் குடிபோதையில் மயங்கி கிடந்த இளம் பெண்

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஒரு இளம்பெண் குடிபோதையில் மயங்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் குடிபழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் பிராந்தியை குடித்து கொண்டு சிரித்து பேசிகொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இதேபோல் கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஒரு இளம்பெண் குடிபோதையில் மயங்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஐராவதீஸ்வரர் கோவில் வளாக புல் தரையில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் கிடந்தார். இதை கண்டு கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 20 வயதுடைய அந்த இளம்பெண்ணின் அருகில் மது பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் சிதறி கிடந்தன. இளம்பெண் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

சிதறி கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

நேற்று இரவு சில வாலிபர்களுடன் இந்த இளம்பெண் வந்ததாகவும் அப்போது அங்குள்ள புல் தரையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். ஆனால் அந்த இடம் இருட்டாக இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இன்று காலையில் பார்த்த போது இந்த பெண் மட்டும் போதையில் சுயநினைவின்றி கிடந்ததை கண்டோம். எனவே நன்பர்களுடன் இந்த இளம்பெண் நேற்று இரவு மது அருந்தி உல்லாசமாக இருந்திருக்கலாம் என்றனர்.

புகழ்வாய்ந்த ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாகவே சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. காதலர்கள் என்ற போர்வையில் வரும் சிலர் பகல் நேரத்திலேயே அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அருவெறுப்பை ஏற்படுத்துகின்றன.