செய்திகள்

தலித் சிறுமியை கைகளால் மலம் அள்ள வைத்த கொடூரம்

மத்தியப்பிரேதசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்த சிறுமியை தனது கைகளால் அகற்ற வைத்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போபால்:

மத்தியப்பிரேதசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள குட்கோரா பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 6-வயது மதிக்கத்தக்க தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி நேற்று மாலை பள்ளி நேரத்தில் மலம் கழிப்பதற்காக ஆசிரியரிடம் அனுமதி வாங்கி வெளியே சென்றுள்ளாள்.

சிறுமி திறந்த வெளியில் மலம் கழித்ததாக கூறப்படுகிறது. அதனை கண்ட பப்பு சிங் என்ற மேல் சமூகத்தைச் சேர்ந்தவர் மிகுந்த கோபமடைந்துள்ளார். அச்சிறுமியை கண்டித்து மலத்தை சிறுமியின் கைகளால் எடுத்து சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளாள். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பப்பு சிங் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, பப்பு சிங் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாகியுள்ள சிங்கை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT