செய்திகள்

உத்தரப்பிரதேசம்: இளம் பெண் உயிருடன் எரித்துக்கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை தந்தை, மகன் சேர்ந்து உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மித்தாலி லாலின் 19 வயது மகள் அஞ்சு நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் தன் தந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.

அங்கிருந்த அஞ்சு மீது இருவரும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயமடைந்த அஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இளம் பெண்ணை வீட்டிற்குள்ளே சென்று உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.