செய்திகள்

பலவீனமடைந்த வாயு புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தை கடந்தது

குஜராத் மாநிலத்தை மிரட்டிவந்த வாயு புயல் பலவீனமடைந்து இன்று கட்ச் மாவட்டத்தின் கடற்கரை பகுதி வழியாக கரையை கடந்தது.

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து கடந்த 13-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் புயல் திசைமாறி கடலோர பகுதியையொட்டி மேற்கு நோக்கி நகர்ந்தது.
 

திடீரென ‘வாயு’ புயல் மீண்டும் திசைமாறி குஜராத் கடற்கரை பகுதி நோக்கி திரும்பியது. எனினும் புயல் வலுஇழந்து தாழ்வழுத்த மண்டலமாக மாறி போர்பந்தரில் இருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நேற்று முன்தினம் காலை கடல்பகுதியில் மையம் கொண்டிருந்தது.  மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகர்ந்தது.