கோப்பு படம். 
செய்திகள்

தஞ்சை அருகே சைக்கிள் மீது லாரி மோதல்- தொழிலாளி பலி

தஞ்சை அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சையை அடுத்துள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (வயது61). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் சைக்கிளில் வளம்பக்குடி- கிள்ளுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட சங்கிலிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கிலிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT