விபத்து 
செய்திகள்

அவினாசி அருகே சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவர் பலி

அவினாசி அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து தெக்கலூர் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ராஜா. இவரது மகன் தீனா (வயது 13)இவர் தெக்கலூர் அரசுப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர்கள் திண்டிவனம் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த மாணவரும் அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் தெக்கலூர் வடுகபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் (13) ஆகிய இருவரும் தெக்கலூர் செங்காலிபாளையம் ரோட்டில் உள்ள பாலத்தின் கீழ் சைக்கிளில் சென்றனர். சைக்கிளை தீனா ஓட்டினார்.

இந்த நிலையில் பாலத்தில் இருந்து திரும்பியபோது எதிரே வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.

இதில் இவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் தீனா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த ஸ்ரீதர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.