காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கெல்லி சிப்ளே-ஐ எதிர்கொண்டார். இதில் மணிகா பத்ரா 9-11, 11-7, 11-5, 11-7 என வெற்றி பெற்றார். 2-வது போட்டியில் மதுரிகா பத்கர் டின்-டின் ஹோவை எதிர்கொண்டார். இதில் மதுரிகா 11-7, 13-11, 10-12, 11-8 என வெற்றி பெற்றார்.
3-வது போட்டியில் இரட்டையர்களான மவுமான தாஸ் - மதுரிகா பத்கர் இங்கிலாந்து ஜோடியை 11-7, 8-11, 11-7, 11-1 என வீழ்த்தினார்கள். இதனால் இந்தியா 3-0 என இங்கிலாந்து வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி வலுவான சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தங்க பதக்கமும், தோல்வியடைந்தால் வெள்ளி பதக்கமும் கிடைக்கும். இதனால் இந்தியாவிற்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் பதக்கம் உறுதியாகியுள்ளது.