டாம் லாதம் 
செய்திகள்

இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: உலகக்கோப்பை யாருக்கு?

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

மாலை மலர்

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் நியூசிலாந்து 21.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதேவேகத்தில் சென்றால் நியூசிலாந்து 300 ரன்னைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  நியூசிலாந்தின் ஸ்கோர் 103 ரன்களாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய நிக்கோல்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த டெய்லர் 15 ரன்னிலும், நீஷம் 19 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை எட்டுமா? என்று எதிர்பார்த்து ஏற்பட்டது.