செய்திகள்

ராஜஸ்தானில் ரூ.45 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்- 2 பேர் கைது

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.#Customsseized #foreigncurrency

மாலை மலர்

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். பணத்தை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.