கொள்ளை 
செய்திகள்

கம்பம் அருகே கடை பூட்டை உடைத்து ரூ.76 ஆயிரம் திருட்டு

கம்பம் அருகே ஆட்டோ ஸ்டோர் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

கம்பம் மணிநகரம் பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் கடை உள்ளது. இந்த கடையில் காரைக்குடியைச் சேர்ந்த நைனா முகமது (வயது 50). என்பவர் கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வசூலான பணம் ரூ.76 ஆயிரத்தை கல்லாவில் வைத்து விட்டு சென்று விட்டார்.

மறு நாள் காலையில் பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து நைனா முகமது கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT