கைது 
செய்திகள்

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கம்பம்:

கம்பம் கோம்பை சாலையில் உள்ள கிரிக்கெட் மைதானம் பகுதியில் கஞ்சா விற்பதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்று கஞ்சா விற்ற திண்டுக்கல் மல்லையாபுரத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 42), கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த ரத்தினக்குமார் மனைவி சசிகனி (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.