செய்திகள்

டெல்லி போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை விமான நிலையத்தில் டெல்லி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரி சோதித்தனர்.

சென்னையை சேர்ந்த கோபி என்பவரது ஆவணங்களை சரிபார்த்த போது அவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் டெல்லி போலீசாரால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி என்பது தெரிந்தது. இதையடுத்து கோபியை கைது செய்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். #tamilnews

SCROLL FOR NEXT