செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து சிறை அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

கடலூர்:

மதுரை செண்பகாநரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். ஆயுள் தண்டனை கைதியான இவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அறையில் சிறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர் செல்போனை மறைத்து வைத்து அதனை பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.