செய்திகள்

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒரு வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை வாகனம் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #SecurityForce #MilitantAttack

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பட்மலூ பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பாதுகாப்பு படை வாகனங்களை வழிமறைத்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரது உயிர் வரும்வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.