ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ராவல்கோட் பகுதிக்கு வாரம் இரு தடவை பஸ் சென்று வருகிறது. இதனால் ஜம்மு மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த சேவை கடந்த 2006ல் இருந்து செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில தினங்களாக இந்திய எல்லைப்பகுதியை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். மேலும் குண்டுகளையும் தொடர்ந்து வீசி வருகின்றனர். இன்றும் தாக்குதல் நடத்தியது. இதில், ராவல்கோட்டுக்கு செல்லும் பஸ், எல்லையைக் கடக்கும் பகுதியான சகான்-டா-பாக்கில் உள்ள வர்த்தக உதவி மையம் மற்றும் போலீஸ் முகாம்கள் சேதமடைந்தன.