குரோசியா நாக்அவுட் போட்டிகளை காண அந்நாட்டு பெண் அதிபரான கொலிண்டா கிராபர்-கிட்டாரோவிச் ரஷியா வந்துள்ளார். அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை நேராக கண்டுகளிப்பதுடன் வீரர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். காலிறுதியில் ரஷியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியபோது, வீரர்கள் மற்றம் பயிற்சியாளர்களை நேரில் சென்று பாராட்டினார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் குரோசியா வெற்றி பெற்றதும், வீரர்களை அறைக்குச் சென்று அவர்களுடன் சந்தோச மிகுதியில் ஆட்டம்போட்டார். நாட்டின் பெண் அதிபர் ஒருவர் வீரர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Croatian president celebrating with the team after that win 😂 pic.twitter.com/X45AyhCMQ0