2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் போர்ச்சுகல்லில் உள்ள போர்டோவில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி, பேரோ தீவு அணியை சந்தித்தது. இதில் போர்ச்சுகல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல்கள் அடித்தார். 144-வது சர்வதேச போட்டியில் ஆடிய ரொனால்டோ மொத்தம் 78 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவை (77 கோல்கள், 91 போட்டிகளில்) ரொனால்டோ முந்தினார்.