செய்திகள்

ரேஞ்ச் ரோவர் டயர் வெடித்தது: காயமின்றி உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, தனது காரின் டயர் வெடித்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மாலை மலர்

தற்போது துலீப் டிராபி தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் இந்தியா ப்ளூ அணிக்கு ரெய்னா கேப்டனாக உள்ளார். நாளை இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டி கான்பூரில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா ப்ளூ அணியில் இணைய இன்று அதிகாலை காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு சொகுசு காரான ரேஞ்ச் ரோவரில் சென்று கொண்டிருந்தார். கார் எட்டாவா பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, டயர் திடீரென வெடித்தது.