இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சத்தீஸ்வர் புஜாரா, மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரது பெயர்களை விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளது. ஹாக்கி விளையாட்டு வீரர்கள் எஸ்.வி.சுனில், தரம்வீர் சிங், தீபிகா ஆகியோரது பெயர்களை ஹாக்கி இந்தியா அமைப்பு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஹாக்கி இந்தியா சார்பில் மேஜர் தயான் சந்த் விருதுக்கு ஆர்.பி.சிங், சும்ராய் டேடீ பெயர்களும், துரோணாச்சாரியார் விருதுக்கு சந்தீப் சங்வான், ரோமேஷ் பதானியா பெயர்களும், ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சர்தார் சிங் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.