அதன்படி செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் அந்த்ரே பிளெட்சர், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிளெட்சர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் ரஹீம் கார்ன்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கார்ன்வால் 29 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கார்ன்வால்
3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் 72 ரன்னும், பொல்லார்டு 23 பந்தில் 65 ரன்னும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க செயின்ட் லூசியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தார்.