செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? ஐதராபாத்தில் 18-ம் தேதி தேசிய மாநாடு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது 5 நாள் தேசிய மாநாடு வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #CPIM

மாலை மலர்

ஐதராபாத்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சீத்தாராம் யெச்சூரி மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் அக்கட்சியின் 22-வது தேதிய மாநாடு வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் தற்போதைய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். மேலும், 25 முக்கிய தீர்மானங்கள் விவாதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட உள்ளன.

புதிய பொதுச்செயலாளர் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் மாநாட்டின் இறுதி நாளில் நடக்க உள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. #Towards22ndPartyCongress #CPIM #TamilNews