பிரதமர் மோடி 
செய்திகள்

பிரதமர் மோடியின் 10 பெரிய பொய்கள்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றில் மோடி அரசின் ‘10 பெரிய பொய்கள்’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சி.ஏ.ஏ., என்.சி.ஆர்., மற்றும் என்.பி.ஆர். விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

‘குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள்  பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு- மோடி அரசின் 10 பெரிய பொய்கள்’ என்ற தலைப்பில் அந்த கட்சி புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, ‘‘குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்’’ என்றார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள புத்தகத்தில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் நாங்கள் சொல்லாததை குறிப்பிட்டு மோடி பேசி உள்ளார். குடியுரிமையை விலக்கி வைப்பதில் நச்சுக் கொள்கையை இணைக்க முயற்சிக்கிறது’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் என்.பி.ஆருக்கும், என்.ஆர்.சி.க்கும் தொடர்பு இல்லை என்று முற்றிலும் பொய்யான கருத்துக்களை கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.