கொரோனா வைரஸ் பலி - கோப்புப்படம் 
செய்திகள்

ஸ்ரீநகரில் பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

மாலை மலர்

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளால் பிரதான மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த தொற்றால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதில் முக்கியமாக ஸ்ரீநகரின் பெமினா பகுதியை சேர்ந்த பிறந்து 15 நாட்களேயான பச்சிளம் குழந்தையும் அடங்கும். கடந்த 17-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தை நேற்று காலையில் உயிரிழந்தது.