சுகாதாரத்துறை மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை 
செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை- மத்திய மந்திரிகள் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள 5ம் கட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. 

இந்நிலையில், மத்திய மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.