செய்திகள்

பாபநாசத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

குற்ற வழக்கு முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசம்:

பாபநாசம் கோர்டில் வக்கீல்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வக்கீல் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் வெற்றிச்செல்வன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட நீதிபதிக்கான தேர்வில் பிற மாநிலத்தவரை அனுமதிக்ககூடாது. பிறப்பு, இறப்பு பதிவேடுகளை நீதிமன்றம் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்கு முத்திரை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

SCROLL FOR NEXT