புலிக்குட்டி 
செய்திகள்

சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் புலிக்குட்டியை வாங்கிய பிரான்ஸ் தம்பதி

பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு பிரான்ஸ் நாட்டு தம்பதி ஒன்று புலிக்குட்டியை வாங்கியதால் போலீசார் கைது செய்து பின் விடுக்கப்பட்டனர்.

மாலை மலர்

ஹார்வே:

பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே நகரைச் சேர்ந்த தம்பதி சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். 

ஆன்லைன் விளம்பரம் ஒன்றின் மூலமாக பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை 2018-ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ 5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால், சில நாட்களில் குட்டியில் ஏற்பட்ட உருவ மாற்றத்தை அடுத்து அவர்களுக்கு சந்தேகம் வந்ததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அவர்கள் வளர்த்து வந்தது இந்தோனேஷியாவின் சுமத்ரான் வகை புலி என்று தெரிய வந்தது. 2 வருட விசாரணைக்கு பிறகு பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்தியாக லே ஹார்வே தம்பதி 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அறிவுரை கூறி  பின் விடுவிக்கப்ட்டனர்.