மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அம்மாநிலத்தின் தென் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சராபாரி பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரையும் கலவரக்காரர்கள் எரித்துக் கொன்றுள்ளனர்.
மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவபிரசாத் தாஸ் மற்றும் அவருடைய மனைவி உஷா ஆகியோர் எரித்து கொல்லப்பட்டதாக மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஷமிக் லஹிரி தெரிவித்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.