நெல்லை:
பாளையங்கோட்டை ஜோதி புரத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் வினோத்குமார் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த செல்வம் மகள் சவுந்தர்யா (21) என்பவருக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்தது.
2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சவுந்தர்யாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி நேற்று நெல்லை டவுனில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோரை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.