காதல் ஜோடி 
செய்திகள்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு நாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழப்படுகை மெயின் சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 25). ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் யாஸ்மின் (19). காதல் திருமணம் செய்த இவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் பாஸ்கரன் கூறியிருப்பதாவது:-

நான் திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தொழில் சம்பந்தமாக ஈரோடு செல்லும் போது யாஸ்மினுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12-ம் தேதி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்களை குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.