ஆப்பிரிக்கா யானை 
செய்திகள்

ஆப்பிரிக்காவில் யானைகள் விற்பனைக்கு தடை

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வன உயிரியல் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஜெனீவா:

உலகம் முழுவதும் அழிந்துவரும் உயிரினங்களின் விற்பனையை தடுக்க ‘சி.ஐ.டி.இ.எஸ்’ என்கிற சர்வதேச அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள், அத்தகைய உயிரினங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை கண்காணித்து கட்டுப்படுத்தி வருகின்றன.  இந்த நிலையில் ‘சி.ஐ.டி.இ.எஸ்’ உறுப்பு நாடுகளின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உலகிலேயே ஆரோக்கியமான யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வன உயிரியல் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளில் 87 நாடுகள் ஆதரவாகவும், 29 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்துவிட்டன.

இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் இனி ஆப்பிரிக்க யானைகள் பிறநாடுகளுக்கு விற்கப்படுவது தடை செய்யப்படுகிறது. இதற்கு வன உயிர் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT