செய்திகள்

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் மனைவியுடன் தற்கொலை

திருப்பூரில் தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் டி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). மாநகராட்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கலைவாணி (30). மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று பள்ளி முடிந்து அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்ற குழந்தைகளை அவர்களது உறவினர் ஒருவர் கலைவாணியின் வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டின் கதவை தட்டியபோது நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டின் உள்ளே பாலமுருகனும், கலைவாணியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார் இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியினர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்ப பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.