கேரளா மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வி.முரளிதரன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் வெளியுறவுத்துறை இணை மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
அவர் அங்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டு வந்த பின்னர் அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு டாக்டர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
பாதிப்புக்குள்ளான டாக்டரை முரளிதரன் நேரடியாக சந்திக்காவிட்டாலும் முன்எச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக இன்று மாலை தெரிவித்துள்ளார்.
தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் கேரளாவுக்கு வந்த அந்த டாக்டர் தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.