தாஜ்மகால் 
செய்திகள்

தாஜ்மகால் மூடப்பட்டது- சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் தாஜ்மகால் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தாஜ்மகாலுக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

மாலை மலர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் பள்ளி- கல்லூரிகள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா மையங்கள், பொழுது போக்கு மையங்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுபோல ஏப்ரல் 15-ந்தேதி வரை பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைகள், தியேட்டர்கள், வழிபாட்டு மையங்கள் வெறிச்சோட தொடங்கி உள்ளன.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருவதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் புதிய வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று வரை தாஜ்மகாலுக்கு ஏராளமானோர் வந்து சென்றனர்.