பூடான் எல்லைப்பகுதி 
செய்திகள்

கொரோனா வைரஸ் பீதி: பூடான் எல்லையை மூடியது மேற்கு வங்காளம் அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள பூடான் நாட்டு எல்லைப்பகுதியை மேற்கு வங்காளம் மாநில அரசு மூடியது.

மாலை மலர்

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்.

இதைதொடர்ந்து, அண்டைநாடான மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதி நுழைவு வாயில்கள் மூடப்படுவதாக மணிப்பூர் அரசும் அறிவித்தது. முன்னதாக, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் அரசுகளும் தங்களது மாநிலங்களில் வெளிநாட்டினர் நுழைவதற்கு தடை விதித்துள்ளன.