சிறை கைதிகள் (கோப்புப் படம்) 
செய்திகள்

கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பான பட்டியல் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

சிறைகளில் அதிகமானவர்களை அடைத்து வைப்பதால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்காமல் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைக்குமாறு மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

மாலை மலர்

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிறைகளில் அதிகமானவர்களை அடைத்து வைப்பதால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்காமல் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் குழு ஒன்றை அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ளது.