பலதுறைகளில் அரும்சாதனை படைத்தவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மிகவும் உயரிய பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளுக்கான பெயர்களை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இவர்களுக்காக விருதுகளை வழங்கும் விழா டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் கொரோனா தாக்கத்துக்கு இருவர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடராக கருதி துரிதகதியில் தீவிரமாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.