கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் உழவார பணியில் ஈடுபட்டு காரில் ஊர் திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.
அவர் குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு சளி மற்றும் ரத்தி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதியவர் வசித்து வந்த பகுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்ததாக கார் டிரைவர் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.