கோடம்பாக்கம் 
செய்திகள்

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா - கோடம்பாக்கம் மண்டலத்தில் 461 பேருக்கு பாதிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகரில் 448 பேருக்கும், ராயபுரத்தில் 422 பேருக்கும், அண்ணாநகரில் 206 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 184 பேரும், தேனாம்பேட்டையில் 316 பேரும், திருவொற்றியூரில் 43 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 205 பேருக்கும், பெருங்குடியில் 22 பேருக்கும், அடையாறில் 107 பேருக்கும், அம்பத்தூரில் 144 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 16 பேருக்கும், மாதவரத்தில் 33 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 15 பேருக்கும், மணலியில் 14 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.