டாக்கா:
உலக நாடுகள் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் பரவியுள்ளது. அங்கு சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும் கொரோனா, 140-க்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்துள்ளது.
இந்தநிலையில் தலைநகர் டாக்காவின் சுவாமிபாக் பகுதியில் அமைந்துள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) கோவிலில் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 8-ந் தேதி முதல் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் இயக்கத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்தனர். அவர்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த கோவில் மட்டுமின்றி, கோவில் அமைந்துள்ள சாலையும் மூடப்பட்டுள்ளன.