மூலிகை மருந்து 
செய்திகள்

கொரோனா பீதியில் காய்ச்சலுக்கு மூலிகை மருந்து குடித்த 4 பேர் மயக்கம்

உசிலம்பட்டி அருகே கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்ற அச்சத்தில் மூலிகை மருந்து குடித்த 4 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குன்னூத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன்கள் திராவிட செல்வம் (வயது8), பெரியார் செல்வம், விஷ்வா.

மும்பையில் இட்லி கடை நடத்தி வரும் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினர்.

இந்த நிலையில் திராவிட செல்வத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. சளி, இருமல் தொந்தரவும் இருந்தது. மும்பையில் இருந்து திரும்பியதால் கொரோனா காய்ச்சலாக இருக்குமோ என்ற பயந்த கவிதா, தனது மகன்கள் 3 பேருக்கும் மூலிகை மருந்து கொடுத்தார். பின்னர் தானும் குடித்தார்.

மூலிகை மருந்து குடித்த சிறிது நேரத்தில் 4 பேரும் மயங்கினர். உடனே அவர்கள் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT