மத்திய அரசு 
செய்திகள்

ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும்- மத்திய அரசு உத்தரவு

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட 75 மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட 75 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் உள்ளன.