விருதுநகர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 8,151 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 237 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,388ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6,041 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 90 பேர் உயிரிழந்துள்ளனர்.