கொரோனா வைரஸ் 
செய்திகள்

விருதுநகரில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,729 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,603 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,729ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1,004 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.