அமமுக பொருளாளர் வெற்றிவேல் 
செய்திகள்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:

அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேலுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.