கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 73 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து 32 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.