கொரோனா வைரஸ் 
செய்திகள்

வேலூரில் மேலும் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,205 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,205 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 16,211 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT