கொரோனா வைரஸ் பரிசோதனை 
செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,714 ஆக உள்ளது.

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 84,598 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4,519 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,714 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2196 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.